லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து உள்ளது. நேற்று ஒரே நாளில் (வியாழக்கிழமை) புதியதாக 22,439 பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்ட்டுள்ளது. அதுபோல 114 பேர் உயிரிழந்துள்ளனர். இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,17,353 பேருக்கு கொரோனா தொற்று உறுதி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,17,353 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,42,91,917-ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் இன்று ஒரே நாளில் 1,185 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை கொரோனாவால் பலியானவர்களின் 1,74,308- ஆக அதிகரித்துள்ளது. மேலும் நாடு முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 1,25,47,866 கொரோனாவிலிருந்து மீண்ட நிலையில் 15,69,743 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், உ.பி.மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 22,439 பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்ட்டுள்ளது. இது கொரோனா தொற்று பரவல் ஆரம்பித்ததிலிருந்து அம் மாநிலத்தி ஒரே நாளில் பதிவான எண்ணிக்கையில் உச்சகட்டமாகும்.
அதுபோல நேற்று ஒரே நாளில் 114 பேர் உயிரிழந்துள்ளனர். .தற்போது மாநிலத்தில் 1,29,848 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போதைய நிலையில் 54ஆயிரம் பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது
உத்தரப்பிரதேசத்தில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், மொத்தம் 1,00,51,328 பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது என்றும் மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் (சுகாதார) அமித் மோகன் பிரசாத் தெரிவித்துள்ளார்.
உபி. மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அமைச்சர் ஒருவர் ஏற்கனவே கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.