டெல்லி: நாடு முழுவதும  கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில்,   மோடி அரசின் அடுத்த கட்ட கொரோனா நடவடிக்கை இதுதான் என ராகுல்காந்தி நக்கல் செய்து டிவிட் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,17,353 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதுடன்  1,185 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பரவலை தடுக்கும் வகையிலான நடவடிக்கையில் மத்தியஅரசு தொய்வடைந்துள்ளது. தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வரும் நிலையில், நமது நாட்டில் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில் அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்று காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி கிண்டல் செய்து 3  செய்திகளை கூறி  டிவிட்  பதிவிட்டுள்ளார்.

“மத்திய அரசின் கொரோனா நடவடிக்கைகள்; படி

1 . ஊரடங்கு விதித்தல்,

2. மணி அடித்தல்,

3. கடவுளை வாழ்த்தி பாடுதல்” என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.