டெல்லி: நாடு முழுவதும் கொரோனா 2வது அலையின் பாதிப்பினால் தீவிரமாக பரவி வருகிறது. நேற்று காலை இந்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, 2 லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளாகினர். 6 மாதங்களுக்கு பின், பலி எண்ணிக்கை மீண்டும் 1,038 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2,16,642 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதுபோல, 1182 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
கடந்த 10 நாட்களாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து ஒரு லட்சத்தை கடந்து வருகிறது.
நேற்று ஒரே நாளில் மட்டும் 2 லட்சத்து16 ஆயிரத்து 642பேர் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1 கோடியே 42 லட்சத்து 87 ஆயிரத்து 740 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,182 பேர் பலியானதை சேர்த்து மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 74 ஆயிரத்து 335 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 1லட்சத் து 17 ஆயிரத்து 826 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 25 லட்சத்து 43 ஆயிரத்து 978 ஆக உயர்ந்துள்ளது
தற்போதைய நிலையில் நாட்டில் மொத்தம் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 15 லட்சத்து 63 ஆயிரத்து 588 ஆக உள்ளது.
தொற்று பாதிப்பில் தொடர்ந்து மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது.தொடர்ந்து கேரள, கர்நாடக, தமிழ்நாடு, ஆந்திரா,டெல்லி மாநிலங்கள் உள்ளன.
தொற்று பரவலை தடுக்க தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமாக்கப்பட்டு உள்ளன.