Tamil_News_large_1376277
ஸீ தமிழ் தொலைக்காட்சியில் நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு ஒரு நிகழ்ச்சியை நடத்துகிறார். அதில் திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு, தங்கள் திரையுலக அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் கே.எஸ். ரவிகுமார் கலந்துகொண்டார். அப்போது நிகழ்ச்சி நடத்துநர் குஷ்பு, ஒரு இளநீரை காண்பித்து, “இதைப் பார்த்தவுடன் உங்களுக்கு  என்ன நினைவுக்கு வருகிறது” என்று கேட்டார்.
ரவிகுமார் சிரித்துவிட்டு, “எனக்கு வேற ஒண்ணு நினைவுக்கு வந்துடுச்சு” என்று கிண்டலான தொணியில் கூறினார்.
உடனே குஷ்பு, தனக்கு புரிந்துவிட்டது என்பதைப்போல, உரத்துச் சிரித்தார்.
இளநீர் என்றால் நக்மா நினைவு வருவதாக கே.எஸ். ரவிகுமார் கூறினார்.  அடுத்ததாக தர்பூசணியைக் காட்டியபோது நமீதா நினைவு வருவதாக கூறி, கே.எஸ். ரவிகுமார் சிரிக்க…  குஷ்புவும் ரசித்து சிரித்தார்.
நடிகை என்கிற அளவில் மட்டுமின்றி பொதுவான கருத்துக்களையும் வெளிப்படையாக கூறுபவர் குஷ்பு. பெண்களுக்கு எதிரான விசயம் என்றால் உணர்வு பூர்வமாக தனது எதிர்ப்பை தெரிவிப்பவர். தற்போது அகில இந்திய கட்சியில் பொறுப்பும் வகிக்கிறார். பலவித விஷயங்கள் குறித்து கருத்து தெரிவித்துவருகிறார்.
இப்படிப்பட்டவர் பெண்களை கொச்சைப்படுத்துவது போன்று நிகழ்ச்சியை நடத்தலாமா. ஒருவரின் உடல் அங்கங்களை வைத்து அடையாளம் சொல்வது என்பது தவறு அல்லவா?  குறிப்பாக மோசமான இளைஞர்கள்தானே இளநீர் என்று பெண்களை கேலி செய்வார்கள்?
குஷ்பு.. இது நியாயமா?