சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், தடுப்பூசி போட்டுக்கொண்ட தமிழக டிஜிபி திரிபாதி மற்றும் முதல்வர் பாதுகாப்பு பிரிவு எஸ்பிக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.
தமிழகத்தில் நேற்று புதிதாக 6,984 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 9,47,129 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.அதிக பட்சமாக சென்னையில் 2,482 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,69,614 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய நிலையில், மாநில முழுவதும் 46,985 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஏற்கனவே தடுப்பூசி போட்டுக்கொண்ட தமிழக திரிபாதி மற்றும் முதல்வர் பாதுகாப்பு பிரிவு எஸ்பிக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக கூறப்படுகிறது.
தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.