சென்னை
தமிழகத்தில் இன்றைய (13/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் இன்று 6,984 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 9,47,129 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 12,945 பேர் உயிர் இழந்து 8,84,199 பேர் குணம் அடைந்து தற்போது 49,985 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் மட்டும் இன்று 2,482 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதுவரை சென்னையில் 2,69,614 பேர் பாதிக்கப்பட்டு 4,337 பேர் உயிர் இழந்து 2,46,604 பேர் குணம் அடைந்து தற்போது 18,673 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 64,319 பேர் பாதிக்கப்பட்டு 700 பேர் உயிர் இழந்து 59,099 பேர் குணம் அடைந்து தற்போது 4,520 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது. இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 62,280 பேர் பாதிக்கப்பட்டு 849 பேர் உயிர் இழந்து 56,788 பேர் குணம் அடைந்து தற்போது 4,643 பேர் சிகிச்சையில் உள்ளனர்.