சென்னை: மங்களகரமான நாட்களில் சொத்து பதிவுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என பத்திரப்பதிவுத்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு இன்று (செவ்வாய்க்கிழமை) உத்தரவிட்டுள்ளது. இது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
ஏழை எளிய மக்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும், மங்களகரமான நாட்களில்தான் வீடு, நிலங்கள், வாகனங்கள் போன்றவற்றை வாக்குவதும், விற்பனை செய்வதும் வழக்கமான நடைமுறை. ஆனால், அதுபோல மங்களகரமான நாட்களில் பத்திரப்பதிவுக்க கூடுதல் கட்டணம் என அடாவடியாக அறிவித்துள்ளது மக்களிடையே கடும் அதிருப்தியை பெற்றுள்ளது மாநில அரசு.
‘
இதுகுறித்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை முதன்மை செயலாளர் பீலா ராஜேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசின் வருவாயை பெருக்கும் நோக்கில் சித்திரை முதல் தேதி, ஆடிப்பெருக்கு மற்றும் தைப்பூசம் ஆகிய மங்களகரமான நாள்களில் பதிவு அலுவலகங்களை செயல்பாட்டில் வைத்தால், பொதுமக்கள் பத்திர பதிவு செய்ய ஏதுவாக இருக்கும். ஆகையால் மங்களகரமான நாள்களில் பத்திரப்பதிவு அலுவலகங்களை திறந்து வைக்க வேண்டும். மேலும், அத்தகைய நாள்களில் பதிவு செய்வதற்கு கூடுதல் கட்டணங்களை வசூலிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.