சென்னை: உகாதி மற்றும் தமிழ்புத்தாண்டு அரசு விடுமுறையை முன்னிட்டு சென்னையில் உள்ள கடற்கரைகளில் இன்றும் நாளையும் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.
கடந்த ஆண்டு கொரோனா பொதுமுடக்கம் காரணமாக மார்ச் மாதம் இறுதி முதல் அக்டோபர் மாதம் வரை மெரினா உள்பட கடற்கரை பகுதிகளில் மக்கள் கூட அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. பின்னர் தளர்வுகள் அறிவிப்பு காரணமாக பொதுமக்கள் கடற்கரை செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால், தற்போது தொற்று பரவலின் 2வது அலை தீவிரமடைந்துள்ளதால், விடுமுறை தினங்களில் கடற்கரைக்கு வர பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, தெலுங்கு வடப்பிறப்பான இன்றும், தமிழ் வருடப்பிறப்பான நாளையும் பொதுமக்கள் கடற்கரை வர அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.