டில்லி

பிரதமர் மோடியை அனைவருக்கும் மத்திய அரசு கொரோனா தடுப்பூசி போட வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.

நாட்டில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  கடந்த சில நாட்களாக உலக அளவில் தினசரி கொரோனா பாதிப்பில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது.   நேற்று ஒரே நாளில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு கிட்டத்தட்ட 1.70 லட்சத்தை எட்டி உள்ளது.

கடந்த ஜனவரி முதல் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.  முதல் கட்டமாக கொரோனா முன் களப்பணியாளர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டது.   அடுத்த கட்டமாக 60 வயதைத் தாண்டியோர்45 வயதைத் தாண்டிய இணை நோய் உள்ளோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

தற்போது 45 வயதை தாண்டியோருக்கு போடப்படுகிறது.  கொரோனா பரவல் அதிகரித்து வரும் வேளையில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் எனப் பல மாநில முதல்வர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் தொடர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தனது டிவிட்டரில்,.

“மோடிஜி,

உங்கள் பணியை எங்கள் மீது சுமத்தி விட்டு நீங்கள் உங்கள் பொறுப்பில் இருந்து கை கழுவ வேண்டாம்.

உங்கள் அரசு ஒவ்வொருவராக இல்லாமல் ஒவ்வொருவருக்கும் கொரோனா தடுப்பூசி போட வேண்டும்

எனப் பதிவிட்டுள்ளது.