கொச்சி:
கொரோனா பரவல் காரணமாக கேரளாவில் சுற்றுலா பயணிகள் வருகை பாதிக்கபட்டுள்ளது.

கேரளாவில் அடுத்த மூன்று வாரங்கள் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்பதால் கட்டுப்பாடுகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

கடந்த ஓணம் மற்றும் உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு மாநிலத்தில் கொரோனா பாதிப்பு உயர துவங்கியது. 2020 அக்.7ல் பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்ததோடு அதிகபட்சமாக அக்.11ல் பாதிப்பு 11755ஐ எட்டியது. அதன்பிறகு பாதிப்பு படிப்படியாக குறைந்தது. குறைந்தபட்சமாக மார்ச் 22ல் 1239 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது.

இந்நிலையில் சட்டசபை தேர்தலுக்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு பாதிப்பு அதிகரிக்க துவங்கியது. நேற்று ஒரேநாளில் 5063 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 2475 பேர் குணமடைந்தனர். 22 பேர் பலியானதால் உயிரிழப்பு 4750ஆக அதிகரித்தது. இதற்கிடையே மாநிலத்தில் அடுத்த 3 வாரத்தில் கொரோனா பரவல் அதிகரிக்கும் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

அதன்படி 10 மற்றும் பிளஸ்-2 தேர்வுகளுக்கு பின் சுற்றுலா இடங்களில் கூட்டத்தை கட்டுப் படுத்த சிறப்ப நெறிமுறைகள் நடைமுறைபடுத்தப்படுத்தப்பட உள்ளது. மேலும் முதியோர் மற்றும் பிற நோயாளிகள் வெளிதொடர்புகளை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப் பட்டு உள்ளது.

இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக கேரளாவில் சுற்றுலா பயணிகள் வருகை பாதிக்கபட்டுள்ளதாக ஷிகாரா படகு ஓட்டுநர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கொரானா ஊரடங்குக்கு முடிந்து மீண்டும் சகஜ நிலைக்கு திருப்பிய போது, எங்கள் தொழில் நன்றாக இருந்தது. ஆனால் இப்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மீண்டும் சுற்றுலாப் பயணிகள் வருகை குறையத் தொடங்கியுள்ளது. இதனால், ஊரடங்கின் போது இருந்த நிலைமைக்கு நாங்கள் திரும்பி வருகிறோம்” என்று தெரிவித்தார்.

இதுமட்டுமின்றி கேரளாவின் கோட்டை கோச்சி கடற்கரை கொரோனா பயம் காரணமாக வெறிச்சோடி காணப்படுகிறது. கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மாநில அரசு மீண்டும் கடுமையாக்கியுள்ளதால் வணிகங்கள் முன்னோடியில்லாத நெருக்கடியை எதிர்கொள்கின்றன.