
மும்பை: சென்னை அணி நிர்ணயித்த 188 ரன்கள் இலக்கை விரட்டும் டெல்லி அணி, வலுவான துவக்கம் கண்டுள்ளது.
துவக்க வீரர்களாக களம் கண்டுள்ள பிரித்விஷா மற்றும் ஷிகர் தவான் இருவரும் தங்கள் விக்கெட்டுகளைப் பறிகொடுக்காமல் சிறப்பாக ஆடி வருகின்றனர்.
இதுவரை 18 பந்துகளை சந்தித்துள்ள பிரித்விஷா 36 ரன்களை சேர்த்துள்ளார். அவர் 1 சிக்ஸர் & 6 பவுண்டரிகள் அடித்துள்ளார்.
அதேசமயம், 18 பந்துகளை சந்தித்துள்ள தவான், 29 ரன்களை 1 சிக்ஸர் & 4 பவுண்டரிகள் உதவியுடன் சேர்த்துள்ளார். இதனால், டெல்லி அணி, 6 ஓவர்களில் 65 ரன்களை, விக்கெட் இழப்பின்றி சேர்த்து வலுவாக உள்ளது.
சென்னையின் ஷர்துல் தாகுர் வீசிய ஒரே ஓவரில் 17 ரன்கள் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது ஜடேஜாவை களத்திற்கு கொண்டுவந்துள்ளார் தோனி.
Patrikai.com official YouTube Channel