சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் இன்று மத்தியக்குழு உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் பி. சம்பத், அ. சவுந்தரராசன், உ. வாசுகி மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், கொரோனா தொற்று இரண்டாவது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேணடும். உரவிலை உயர்வை உடனே திரும்பப்பெற வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
உரவிலை உயர்வுக்கு, திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.