மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், லால், ராஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் கர்ணன். தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் நேற்று வெளியாகிவுள்ளது. ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணிபுரிந்துள்ளார்.

கொரோனா பயத்தை காற்றில் பறக்கவிட்டு அதிகாலையிலேயே படத்தை காண ரசிகர்கள் திரையரங்கில் திரண்டனர். தமிழகத்தின் அனைத்துத் திரையரங்குகளும் ஹவுஸ்ஃபுல்லாயின.

தமிழகம் முழுவதும் நேற்று ஒரேநாளில் 10.39 கோடிகளை இப்படம் வசூலித்திருப்பதாக உள்வட்டார தகவல்கள் கூறுகின்றன. தனுஷ் படம் ஒன்று முதல் நாளில் 10 கோடியை கடப்பது இதுவே முதல்முறை. அந்தவகையில் கர்ணன் முதல்நாள் தமிழக வசூலில் பட்டையை கிளப்பி சாதனை படைத்துள்ளது. இன்று முதல் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இந்த கட்டுப்பாட்டை கடந்து கர்ணன் லாபத்தை அள்ளித் தரும் என்ற நம்பிக்கை அனைத்து தரப்பினருக்கும் உள்ளது.

 

[youtube-feed feed=1]