துரை

துரை நகரில் கொரோனா அதிகரிப்பால் 18 இடங்களில் தெருக்களை தகரம் கொண்டு  மாநகராட்சி அடைத்துள்ளது.

கடந்த 15 நாட்க்லளாக மதுரையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  தினசரி பாதிப்பு, 100, 120 என அதிகரித்து வருகிறது.  கொரோனா பாதிப்புக்குள்ளான சுமார் 800க்கும் மேற்பட்டோர் மதுரை அரசு மருத்துவமனை, தோப்பூர் முகாம்  தனியார் மருத்துவமனைகள் என பல இடங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளிலும் தற்போது கண்காணிப்பு தீவிரமாகி உள்ளது.  குறிப்பிட்ட 8 இடங்களில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமாகக் காணப்படுகிறது.   இந்த பகுதிகளில் 74 பேர்கள் வரை தொற்றால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.  இந்த பகுதிகளில் கொரோனா தொற்று அதிகம் உள்ள தெருக்களைத் தகரம் வைத்து மூடும் பணி நடந்து வருகிறது.

தகரம் அடைப்புக்குள் உள்ள தெருக்களில் உள்ளோர் வெளியே வரவும் அங்கு மற்றவர்கள் செல்லவும் மாநகராட்சி தடை விதித்துள்ளது.   அங்கு வசிப்போருக்குத் தேவையான அத்தியாவசியமான பொருட்களை விநியோகம் செய்ய மதுரை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.   பாதிப்பு அதிகமாகி வருவதால் மேலும் பல தெருக்கள் தகரம் கொண்டு அடைக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது..