ஹாங்காங்

சீன அரசை எதிர்த்துப் போரிடும் ’மில்க் டீ அல்லயன்ஸ்’ குழுவுக்கு ஆதரவாக டிவிட்டர் நிறுவனம் எமோஜி வெளியிட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு சீன அரசை எதிர்த்து ஹாங்காங்கை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் தீவிர போராட்டத்தைத் தொடங்கினர்.   இந்த போராட்டங்களுக்கு மியான்மர், தாய்லாந்து உள்ளிட்ட ஆசிய நாட்டவர் பலர் இணைந்து போராட்டங்களைத் தொடர்ந்தனர்.

இதில் ஹாங்காங், மியான்மர், தாய்லாந்து இளைஞர்கள் சேர்ந்து ’மில்க் டீ அல்லயன்ஸ்’ என்னும் குழுவைத் தொடங்கினர்.   இந்த குழுவினர் சர்வாதிகாரத்துக்கு எதிராக தங்கள் நாடுகளில் போராட்டம் நடக்கும் போது #மில்க்டீஅல்லயன்ஸ் என்னும் ஹேஷ்டாக் உருவாக்கி டிரெண்டிங் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இந்த குழுவின் முதலாம் ஆண்டு நிறைவு விழா இன்று அனுசரிக்கப்படுகிறது.  இதையொட்டி முன்னணி சமூக வலைத் தளமான டிவிட்டர் நிறுவனம் ஒரு புதிய எமோஜியை வெளியிட்டுள்ளது.  இனி டிவிட்டர் வலைத் தளத்தில் மில்க் டீ அல்லயன்ஸ் என டைப் செய்து ஹேஷ் டாக் உருவாக்குவதற்குப் பதில் இந்த எமோஜியை பயன்படுத்தலாம் என டிவிட்டர் அறிவித்துள்ளது.

[youtube-feed feed=1]