தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நேற்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு, இரவு 7 மணிக்கு முடிந்தது.
அதிமுக – பாஜக, திமுக – காங்கிரஸ், அமமுக – தேமுதிக, மநீம – சமக, ஆகியக் கட்சிகள் தங்கள் கூட்டணியுடனும் நாதக தனித்தும் இத்தேர்தலில் களம் காணுகின்றன. 234 தொகுதிகளிலும் 3,998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 6 கோடியே 2,67,446 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.
‘தி க்ரே மேன்’ ஹாலிவுட் படத்துக்காக அமெரிக்காவில் இருக்கிறார் தனுஷ். அவருடன் ஐஸ்வர்யா தனுஷும் சென்றிருப்பதால் அவரும் வாக்களிக்கவில்லை. அதேபோல் ரஜினியின் மற்றொரு மகளான செளந்தர்யா ரஜினிகாந்தும் வாக்களிக்கவில்லை.
ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா, யுவன், மணிரத்னம், வெற்றிமாறன், கவுண்டமணி, வடிவேலு, கே.பாக்யராஜ், விஜயகாந்த், மோகன், கார்த்திக், பார்த்திபன், ராஜ்கிரண், அரவிந்த் சுவாமி, பிரபுதேவா, லாரன்ஸ், விஷால், இயக்குநர் சுந்தர்.சி, சிவா, சமுத்திரக்கனி, ஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன், லிங்குசாமி, கோவை சரளா, மீனா, விக்னேஷ் சிவன் உள்ளிட்டோர் இந்தத் தேர்தலில் வாக்களிக்கவில்லை. இதற்கான காரணம் என்னவென்றும் தெரிவிக்கவில்லை.