மங்களுரு:  கர்நாடக மாநிலம் மங்களூரு பகுதியில் உள்ள இந்துகோவில் ஒன்றின் உண்டியலில் சிறுநீர் கழித்து அசிங்கம் செய்த இஸ்லாமிய இளைஞர் ஒருவர் திடீரென ரத்தம் கக்கி மரணம் அடைந்துள்ளது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து, அவரது மற்ற இரு தோழர்கள் உயிர் பயத்தால்  காவல்நிலையத்தில் சரண் அடைந்துள்ளனர்.

கர்நாடகத்தின் மங்களூரு பகுதியில் அமைந்துள்ளது கொரகஜா என கோவில். கொரகஜா சுவாமி, சிவனின் வடிவமாக கருதப்படுகிறார். அந்த ஊரின் எல்லை தெய்வமாக அப்பகுதி மக்களால் கொண்டாடப்படுகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த கோவில் உண்டியலில் மர்ம நபர்கள் சிறு நீர் கழித்தும்,  ஆண் உறைகளை உள்ளே போட்டும் அட்டூழியம் செய்திருந்தனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த பகுதி பக்தர்கள் அளித்த புகாரின் பேரில்  காவல் துறை விசாரனை மேற்கொண்டது.  ஆனால், காவல்துறையால்  எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

ஆனால், அந்த பகுதி மக்கள் சாமியை தீவிரமாக வேண்டினர். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று விசேஷ பூஜை செய்து வழிபட்டனர். பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றியுள்ளார் கொரகஜா சாமி.

இந்த நிலையில், அந்த பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய இளைஞர் நவாஸ் என்பவர் உடல்நலம் பாதிக்கப்பட்டார்.  அவர் தன்னைத்தானே சுவற்றில் மோதிக்கொண்டு ரத்த வாந்தி எடுத்து, பிதற்றத் தொடங்கினார்.  அவர் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டும், அவருக்கு என்ன நோய் என்று கண்டுபிடிக்க முடியாமல் மருத்துவர்கள் திணறினர்.

இந்த நிலையில் நவாஸ்,  தான் செய்த அசிங்கமான செயலை தனது குடும்பத்தினரிடம் தெரிவித்ததுடன், தான் செய்த தவறுக்காக கொரகஜா மிகவும் கோபமாக இருக்கிறார் என்று கூறியதுடன், சுவாமி கொரகஜாவுக்கு முன் அவர்கள் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டு உயிரைக் காப்பாற்றிக்கொள்ளு மற்ற நண்பர்களிடம் நவாஸ்  கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில்வ,  நவாஸ் அடிக்கடி  தனது தலையை தானே சுவற்றில் மோதிக் கொண்டு ரத்தம் கக்கி இறந்தார்.

இதையறிந்த அவரது கூட்டாளிகளான, அப்துல் ரஹீம் மற்றும் தவுபீக் ஆகியோர் பதற்றம் அடைந்தனர். இதுகுறித்து  காவல்துறையினரிடம் தெரிவிக்க பயந்து கிடந்தனர்.  இந்த நிலையில்,  தவுபீக்கிற்கும், உடல நலக் குறைவு ஏற்பட்டதுடன் அகால மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதனால், அப்துல் ரஹீம் அலறிக் கொண்டு காவல் துறையிடம்  சரணடைந்தார். தாங்கள் செய்த கேவலமான கொடுஞ்செயலை தெரிவித்து மன்னிப்பு வேண்டினார்.

அதைத்தொடர்ந்து  குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 153 (ஏ) கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறை அப்துல் ரஹீமை கைது செய்து சிறையில் அடைத்தது.

கோவிலில் அசிங்கம்  செய்த 2 இளைஞர்கள் அகால மரணம் அடைந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெய்வம் நின்று கொல்லும் என்பது, இந்த விஷயத்தில் உறுதியாகி உள்ளது.