திருப்பதி

திருமலை திருப்பதி கோவிலில் 13 ஆம் தேதி உகாதி பண்டிகையை முன்னிட்டு நாளை ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது.

தெலுங்கு வருடப்பிறப்பான உகாதி பண்டிகை ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கமாகும்.   இங்குள்ள பல கோவில்களில் உகாதி பண்டிகையை முன்னிட்டு பல சிறப்பு உற்சவங்கள் நடைபெறும்.  அவற்றில் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலும் ஒன்றாகும்.

ஏழுமலையான் கோவிலில் வரும் 13 ஆம் தேதி உகாதி பண்டிகை கொண்டாட்டத்தை முன்னிட்டு நாளை அதாவது 6 ஆம் தேதி ஆழ்வார் திருமஞ்சன நடைபெற உள்ளன.  இந்த உற்சவத்தின் போது மூலவர் விக்ரகம் பட்டுத்துணியால் மூடப்படும்.  மேலும் கருவறை உள்ளிட்ட பல இடங்கள் தூயமைப்படுத்தபட உள்ளன.

அப்போது கருவரை, ஆனந்த நிலையம் கொடிமரம், யோக நரசிம்ம சாமி, வகுளமாதா, பாஷ்யகாரர் சன்னிதிகள், சம்பங்கி மண்டபம், ரங்கநாதர் மண்டபம், மகா துவாரம் போன்ற அனைத்து இடங்களும் நாளை தூய்மைப் படுத்தப்பட உள்ளன.  பிறகு பச்சைக் கற்பூரம் திருச்சூனம், மஞ்சள், கிச்சலிக்க்கட்டை ஆகிய மூலிகை பொருட்கள் கோவில் முழுவதும் தெளிக்கப்பட உள்ளன.