சென்னை: தமிழக சட்மன்ற தேர்தலை முன்னிட்டு, நாளை முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, டாஸ்மாக் மதுழபானக் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப் பதிவு வரும் 6-ம் தேதி (செவ்வாய்க்கிழமை ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதையொட்டி நாளை (4ந்தேதி) இரவு 7 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது. வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், நாளை (4ந்தேதி) முதல் 6-ம் தேதி இரவு வரை தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மது விற்பனைக் கடைகள் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. மாதத்தின் முதல்வாரம் என்பதால், குடிமகன்கள் மேலும் 2 நாளைக்காக சரக்குகளை வாங்கி சேமித்து வருகின்றனர்.
இதே போல், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே மாதம் 2-ம் தேதியும் டாஸ்மாக் மது விற்பனைக் கடைகள் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.