சென்னை: திமுக கூட்டணிக்கு 124 இடங்களில் வெற்றி கிடைக்கும் என தந்திடிவி கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் 6ந்தேதி நடைபெற உள்ளது. நாளையுடன் (ஞாயிறு) மாலை 7 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைய உள்ளது.   தேர்தலை முன்னிட்டு பல்வேறு ஊடகங்கள்  தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இந்த நிலையில், தற்போது தந்தி டிவி கருத்துக்கணிப்புகளும் வெளியாக உள்ளன.

இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் தந்தி டிவி தேர்தலுக்கு முந்தைய சர்வே நடத்தி அதன் முடிவுகளை ஒட்டுமொத்தமாக வெளியிட்டுள்ளது. அதன்படி, திமுக கூட்டணி 124 தொகுதிகளிலும் , அதிமுகு கூட்டணி 52 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என தெரிவித்துள்ளது. 52 தோகுதிகளில் கடும் போட்டி நிலவி வருகிறது என்றும் கூறியுள்ளது.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக  மேட்டூர் ,சேலம் மேற்கு, ஜெயம்கொண்டம் ,விருத்தாசலம் ஆகிய 4 தொகுதிகளில் வெற்றிபெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி உதகமண்டலம், மயிலாடுதுறை, அறந்தாங்கி, காரைக்குடி ,ஸ்ரீவில்லிபுத்தூர் ,சிவகாசி, திருவாடனை, ஸ்ரீவைகுண்டம், நாங்குநேரி, குளச்சல் ,விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய தொகுதிகளில் வெற்றி வாய்ப்பைப் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக திமுக இடையே பொள்ளாச்சி, புவனகிரி ,நன்னிலம் ,விளாத்திகுளம், ஆலங்குளம், ஊத்தங்கரை ,மயிலாப்பூர், பெண்ணாகரம், தர்மபுரி, திருப்போரூர் ,ஆகிய தொகுதிகளிலும் கடும் போட்டி நிலவி வருவதாகவும் தெரிவித்துள்ளனது.

மொத்தமுள்ள  234 தொகுதிகளில் அதிமுக கூட்டணி 52 வெற்றிவாய்ப்பை பெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது . அதேபோல் திமுக கூட்டணி 234 தொகுதிகளில் 124 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளும் என்றும் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 58 தொகுதிகளில் இழுபறி நீடிப்பதாகவும் தெரிவித்துள்ளது.