சென்னை: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி, தேர்தல் நடத்தை விதிகள் அமலில்  உள்ள நிலையில், சென்னையில் மட்டும்  விதிமீறல்கள் தொடர்பாக 324 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 43 ரசவுடிகள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும்  காவல்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்  அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி மாலை வெளியானது. அப்போது முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருந்து வருகின்றன. அதன்படி, தேர்தல் நடத்தை விதிகளை மீறுபவர்களை  தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும், கண்காணிப்புக் குழு அலுவலர்களும் கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 28ஆம் தேதி முதல் இன்று 31ஆம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 324 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பணம் மற்றும் விலையுயர்ந்த பொருள்களைக் கொண்டு சென்றதற்காக 383 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் பிரிவின் சென்னை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஷசென்னையில் இதுவரை  உரிமம் பெற்ற 1,799 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், 43 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குற்றவியல் நடைமுறை சட்டத்தின்கீழ் 1,954 ரவுடிகளிடம் பிராமணப் பத்திரத்தில் ஆறு மாதம் எந்த விதமான குற்றங்களிலும் ஈடுபடாமல் இருக்க கையெழுத்து பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.