சிட்னி:
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரைஇறுதிப்போட்டி இன்று நடைபெறுவதாக இருந்த நிலையில், மழையின் காரணமாக ஆட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 7-ஆவது மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டி தற்போது அரையிறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா-இங்கலாந்து அணிகளும், மற்றொரு அரையிறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸி.-தென்னாப்பிரிக்க அணிகளும் மோதுகின்றன.
முன்னாள் உலக சாம்பியனான இங்கிலாந்து அணியை எதிர்த்து இன்று போட்டி நடைபெறுவதாக இருந்தது. சிட்னியில் காலை 9.30 மணி அளவில் இந்தியா இங்கிலாந்து இடையே போட்டி நடைபெறுவதாக இருந்தது. இதில் வெற்றிபெறும் அணி, இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் சூழல் இருந்தது. ஆனால் மழையின் காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்திய அணி 8 பாயிண்டுகளை வைத்துள்ள நிலையில், இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இங்கிலாந்து அணி 6 பாயிண்டுகளை மட்டுமே வைத்துள்ளது.
இன்று பிற்பகல் போட்டி, சவுத்ஆப்ரிகா, ஆஸ்திரேலியா அணிகள் இடையோ நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும்அணியுடன் இந்திய அணி இறுதிப்போட்டியில் விளையாடும்.
இந்த போட்டியில் குரூப் ஏ பிரிவில் 4 ஆட்டங்களிலும் வெற்றி கண்டு முதலிடத்துடன் அரையிறுதிக்கு தகுதி பெற்றது, தற்போது, இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது..
டி20 உலகக் கோப்பை போட்டிகளில் கடந்த 2018 டி20 உலகக் கோப்பை போட்டி அரையிறுதியில் இங்கிலாந்துடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி கண்டு வெளியேறியது இந்தியா. இந்த தடவை முதன்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. இதன் காரணமாக இந்தியா அணி கோப்பை பெறும் வாய்ப்பும் பிரகாசமாகி உள்ளது.
இந்திய அணியில் இளம் தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மாவின் அதிரடி ஆட்டம் மற்றும், நட்சத்திர வீராங்கனைகளான ஸ்மிருதி, ஹர்மன்ப்ரீத், ஜெமிமா, தனியா, வேதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உள்ள நிலையில், இந்த ஆண்டு,மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்திய அணி பெறும் என்று நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.