மும்பை: நாட்டின் பொருளாதார மந்தநிலை வரும் நாட்களிலும் நீடித்தால், கார்ப்பரேட் கடனில் ரூ.10.52 லட்சம் கோடி வராக்கடனாக மாறுவதற்கான வாய்ப்பிருப்பதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; நாட்டில் தற்போதுள்ள பொருளாதார மந்தநிலையானது மேலும் 3 ஆண்டுகள் வரை நீடித்தால், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் கடனில் ரூ.10.52 லட்சம் கோடி வராக்கடனாக மாற வாய்ப்பு உள்ளது.
இந்தத் தொகை, கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் மொத்தக் கடன் தொகையில் 16% ஆகும். ரியல் எஸ்டேட், வாகன துறை, எரிசக்தி உள்ளிட்ட 11 துறைகளில் இருக்கும் அபாயங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
ஏற்கனவே நிதி அழுத்தத்தில் இருப்பதாக அறியப்பட்ட நிறுவனங்களின் கடன்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து தேவையான தகுந்த முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை, கடன் வழங்கிய நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது