புதுடெல்லி: கடும் தட்டுப்பாடு மற்றும் வானளாவிய விலை உயர்வை அடுத்து, தற்போது மீண்டும் வெங்காய வரத்து அதிகரித்துள்ளதால், மார்ச் 15ம் தேதி முதல் வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
வட மாநிலங்களில் வெங்காயத்தின் இருப்பு குறைந்ததால், கடந்த ஆண்டில் வெங்காயத்தின் விலை ஏறிக்கொண்டே இருந்தது. இதனால், சில்லறை பணவீக்கமும் கடுமையாக அதிகரித்தது.
இதையடுத்து வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. ஆனால், தற்போது விளைச்சல் அதிகரித்ததால், வெங்காயத்தின் விலை குறைந்து வருகிறது.
இதுதொடர்பாக, மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், “வெங்காய விலை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால், வெங்காயம் ஏற்றுமதிக்கான தடையை நீக்கிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வரும் 15ம் தேதியன்று வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதியளிக்கப்படும்” என்றார்.