டெல்லி: நாடு முழுவதும் 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மேற்குவங்கம், அஸ்ஸாம் மாநிலங்களில் நாளை 2வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நந்திகிராம்த தொகுதியிலும நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.‘
தமிழகம், புதுச்சேரியுடன் கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய மாநிலங்களிலும் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளாவில் ஏப்ரல் 6-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆனால் அசாமில் 3 கட்டமாகவும், மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாகவும் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இரு மாநிலங்களிலும் முதல் கட்ட தேர்தல் கடந்த 27-ந்தேதி (ஏப்ரல்)) முடிந்து விட்டது.
தொடர்ந்து 2வது கட்ட தேர்தல் ஏப்ரல் 1ந்தேதி (நாளை) நடைபெற உள்ளது. அஸ்ஸாமின் 39 தொகுதிகளிலும், மேற்கு வங்காளத்தில் 30 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இநத் தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்துள்ளது. பூத் சிலிப்புகள் வீடு வீடாக வழங்கப்படும் பணி நடைபெற்று வருகிறது.
நாளை காலை ( 1-ந்தேதி) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா போட்டியிடும் நந்திகிராமிலும் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.
இரு மாநிலங்களிலும் 3-வது கட்ட தேர்தல் 6-ந் தேதி நடைபெற உள்ளது. அத்துடன் அசாமில் தேர்தல் முடிந்து விடும். மேற்கு வங்காளத்தில் மட்டும் மேலும் 5 கட்ட தேர்தல்கள் நடைபெறும்.