பெங்களூரு: ஆபாச சிடி விவகாரம் தொடர்பாக பதவியிழந்த பாஜ மாஜி அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோலியால், தனது உயிருக்கு ஆபத்து என பாதிக்கப்பட்ட இளம் பெண் நீதிபதியிடம் முறையீடு செய்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவில் பாஜக அமைச்சரவையின் நீர்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ரமேஷ் ஜார்கிஹோலி. இவர் இளம்பெங்ண ஒருவருக்கு அரசு வேலைவாங்கித் தருவதாகக் கூறி பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக கூறப்படுகிறது. ஆனால், அவர் வேலை வாங்கி தராததால், பாதிப்புக்கு உள்ளானதாக கூறப்படும் அந்தப் பெண் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இது சர்ச்சையான நிலையில், அமைட்சசர்ல ஜார்கிஹோலி தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த குற்றச்சாட்டு எதிரிகளின் சதி என்று ஜார்கிஹோலி கொடுத்த புகாரின் அடிப்படையில் பெங்களூரு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
புகார் பதிவான ஒரு மணிநேரத்தில் பாதிக்கப்பட்ட பெண் தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று அரசிடம் வலியுறுத்தி, வீடியோ கிளிப் ஒன்றை சமூக ஊடகங்களில் பதிவிட்டார். அந்த வீடியோவில் அரசு தரப்பிலிருந்து மிரட்டல் விடுக்கப்பட்டது தெரிய வந்தது.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண், நீதிபதியிடம் தனது உயிருக்கு உத்தரவாதமில்லை என்று கண்ணீருடன் முறையிட்டதாக கூறப்படுகிறது. இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக, ஆபாச வீடியோ வெளியானபிறகு, எனது குடும்பத்தின் மரியாதை நிரந்தரமாக தொலைந்துவிட்டது. இதுகுறித்து நிறையப்பேர் என்னையும் எனது குடும்பத்தையும் கேள்விகேட்கிறார்கள். அனைவரும் எங்களை தரக்குறைவாக பார்க்கிறார்கள். பாதுகாப்பு இல்லை. இந்த வீடியோ பொதுவெளிக்கு வந்தபிறகு, பலமுறை என்னுடைய வாழ்க்கையை முடித்துக்கொள்ள நான் முயற்சிசெய்தேன். எனது பெற்றோரும் இரண்டுமுறை தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்ள முயற்சி செய்தனர் எங்களுடைய குடும்பத்தை பாதுகாக்க யாரும் இல்லை. எங்களுக்கு அரசியல் பக்கபலமும் இல்லை என்று கூறியிருந்தார்.
இந்த விவகாரம் மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக மாஜி அமைச்சசர் ரமேஷ் ஜார்கிகோளி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. பெங்களூரு கூடுதல் போலீஸ் கமிஷனர் சவுமேந்து முகர்ஜி தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது. இதையடுத்து, சதாசிவநகரில் பதிவான வழக்கு சிறப்பு விசாரணை குழுவுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில், முன்னாள் பத்திரிகையாளர்களான நரேஷ்கவுடா, ஸ்வரன், தொழில்அதிபர் சிவக்குமார் ஆகிய 3 பேரும் பின்னணியில் இருப்பதாகவும், அவர்கள் தலைமறைவாகி உள்ளதாகவும், அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது என கூறப்பட்டுள்ளது.