ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரியிருந்தார். ஆனால், அவருக்குபாஸ்போர்ட் மறுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மெகபூதி முக்கி டிவிட்டர் பக்கத்தில் கடுமையாக மத்தியஅரசை சாடியுள்ளார். ‘இந்தியாவிற்கு தீங்கு விளைவிப்பவர்’ என கூறி தனக்கு பாஸ்போர்ட் வழங்க் மறுத்துள்ளது, காஷ்மீரின் இயல்புநிலை இதுதான் என தெரிவித்துள்ளார்.
ஜம்முகாஷ்தின் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்தியஅரசு, அதை இரு மாநிலங்களாக பிரித்தது. முன்னதாக, மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்கட்சித் தலைவர்கள், பிரிவினைவாதிகள் என பலரை பொது பாதுகாப்புச் சட்டத்தின் (பிஎஸ்ஏ) கீழ் வீட்டுக்காவலில் சிறை வைத்தது. அவர்களில் பலர் விடுதலையான நிலையில், முன்னாள் முதல்வர் மெகபூபா முக்தி மட்டும் விடுதலை செய்யப்படாமல் இருந்தார். இது தொடர்பாக உச்சநீதிமன்றமும் கேள்வி எழுப்பிய நிலையில், பதினான்கு மாதங்களுக்குப் பிறகு, அவர் வி தடுப்பு காவலில் இருந்து விடுவிக்கப்பட்டு ஸ்ரீநகரில் உள்ள அவரது இல்லத்தில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, டெல்லி பறித்ததை திரும்ப பெற போராட்டத்தை நாம் தொடர வேண்டும் என ஆடியோ வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார். இதன் காரணமாக அவர்மீதான வீட்டுக்காவல் மேலும் தீவிரப்படுத்தப்பட்டது. இதற்கிடையில், அவர் தனது ரத்து செய்யப்பட்ட பாஸ்போர்ட்டை மீண்டும் வழங்க வேண்டும் என விண்ணப்பித்து இருந்தார். ஆ னால், அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட் பதிவில், ‘சிஐடி அறிக்கையின் அடிப்படையில் எனது பாஸ்போர்ட்டை வழங்க பாஸ்போர்ட் அலுவலகம் மறுத்துவிட்டது. சிஐடி அறிக்கையில், நான் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பாஸ்போர்ட் வைத்திருக்கும் முன்னாள் முதலமைச்சர், ஒரு வலிமைமிக்க தேசத்தின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் என்கிறார்கள். இதுதான், ஆகஸ்ட் 2019-க்கு பிறகு காஷ்மீரில் திரும்பிய இயல்பு நிலை’ என மெகபூபா கூறி உள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்கும் வகையில், நூற்றுக்கணக்கான அரசியல் தலைவர்களுடன் மெகபூபா முப்தியும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். பின்னர் கடந்த ஆண்டு அவர் விடுவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.