சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் அனைத்து வாக்குச்சசாவடிகளிலும் விவிபேட் இயந்திரம் பயன்படுத்தப்படும் என தமிழக தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, வாக்குச்சாவடிகள் அமைக்கும்பணி, காமிரா பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில், தபால் வாக்குகளும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சாகு, நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விவிபேட் இயந்திரம் பயன்படுத்தப்படும் என்றார்ல.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 88,947 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது இந்த தேர்தலில் 1,55,102 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. அதனுடனான 1,14,205 மின்னணு கட்டுப்பாட்டு இயந்திரங்களின் எண்ணிக்கை உபயோகப்படுத்தப்படும். வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் 1,20,807 வி.வி.பேட் இயந்திரங்களின் பயன்படுத்தப்பட உள்ளது.
வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி தொடங்கி விட்டதாக கூறியவர், இந்த ஆண்டு பூத் சிலிப்பில் புகைப்படம் இடம்பெறாது என்றவர், அரசு அதிகாரிகள் வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கி வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.,