
விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சி, நான்கு சீசன்களை நிறைவு செய்துள்ளது.
‘பிக் பாஸ் 5’ முதல் மூன்று சீசன்களைப் போலவே இந்தாண்டு ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் தொடங்கும்.
எப்போதும் போல பிக் பாஸில் கலந்துக் கொள்பவர்களின் பெயர்கள் இணையத்தில் வலம் வருகின்றன. அந்த வகையில் மூத்த நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் கலந்துக் கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாளில் தான் நமக்கு உறுதியான தகவல்கள் தெரிய வரும். எம்.எஸ்.பாஸ்கர் கமல்ஹாசனுடன் உத்தம வில்லன் திரைப்படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel