இளமை குறையாத இந்தி நடிகர்களில் அனில் கபூரும் ஒருவர்.

இவர் சுனிதாவை கடந்த 36 ஆண்டுக்ளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதியருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

சுனிதா கபூருக்கு கடந்த வியாழக்கிழமை 56 – வது பிறந்த நாள். மனைவிக்கு மெர்சிடீஸ் பென்ஸ் காரை பிறந்த நாள் பரிசாக அளித்து, இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார், அனில் கபூர்.

இந்த காரின் விலை ஒரு கோடி ரூபாய்.

காரின் அருகே நின்று அனில்கபூரும், சுனிதாவும் எடுத்துக்கொண்ட போட்டோக்கள் மும்பை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சுனிதாவுடன், காதல் வயப்பட்ட நாட்களில் – பஸ்சில், ரயிலில், ரிக்‌ஷாவில் பயணித்த அனுபவங்களை தனது இன்ஸ்டாகிராமில் அனில் பதிவு செய்துள்ளார்.

– பா. பாரதி

[youtube-feed feed=1]