மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் பயங்கர வெடிச்சத்தம் ஏற்பட ராணுவ விமானமே காரணம் என மயிலாடுதுறை வட்டாட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.
மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, பூம்புகார், கொள்ளிடம் பகுதியில் இன்று காலை அதிபயங்கர சத்தத்துடன் கூடிய சத்தம் உருவானது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், நில அதிர்வு ஏற்பட்டதாக அதிர்ச்சி அடைநத்னர். காரைக்கால் பகுதியிலும் பயங்கர வெடி சத்தத்துடன் நிலா அதிர்வு உணரப்பட்டதற்காக மக்கள் தகவல் அளித்துள்ளனர். விமானம் போன்ற ஒன்று தாழ்வாக பறந்து சென்றதற்கு பின் தான் இந்த நில அதிர்வை மக்கள் உணர்ந்ததாக கூறப்பட்டது.
இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட வட்டாட்சியர் பிரான்சுவா செய்தியாளர்ளிடம் விளக்கம் அளித்தார். அப்போது, ராணுவ விமானத்தில் ஏர்லாக் விடுவிக்கப்படும் போது சத்தம் ஏற்பட்டதாக வட்டாட்சியர் தகவல் வெடிச்சத்தத்தினால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என தெரிவித்துள்ளார்.