டாக்கா: அண்டை நாடான வங்கதேசத்திற்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில், காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் மரணமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், 4 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மரணமடைந்த 4 பேர், தீவிர தன்மைவாய்ந்த இஸ்லாமிய இயக்கமான ஹெஃபாஸாத்-இ-இஸ்லாம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காவல் நிலையத்தை சூறையாட வந்த கும்பலை நோக்கி தாங்கள் ரப்பர் குண்டுகளால் சுட வேண்டியிருந்ததென்றும், கண்ணீர் புகையைப் பயன்படுத்த வேண்டியிருந்ததென்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நாங்கள் 4 உடல்களைக் கண்டடைந்தோம். அவை அனைத்திலும் குண்டு காயங்கள் இருந்தன. அவர்களில், 3 பேர் மதரஸா மாணவர்கள் மற்றும் ஒருவர் தையல்காரர்” என்று தெரிவித்துள்ளார் வங்கதேச காவல் ஆய்வாளர் ஒருவர்.