டில்லி

விவசாயிகளின் சத்தியாகிரக போராட்டம் மத்திய அரசின் அராஜகம் மற்றும் ஆணவத்துக்கு முடிவு கட்டும் என ராகுல் காந்தி கூறி உள்ளார்.

மத்திய பாஜக அரசின் வேளாண் சட்டங்களுக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.   இந்த சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி டில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இரு தரப்பினரும் பல கட்ட பேச்சு வார்த்தை நடத்தியும் மத்திய அரசின் பிடிவாதத்தால் சுமார் 120 நாட்களுக்கும் மேலாகப் போராட்டம் தொடர்கிறது.  இந்நிலையில் மத்திய அரசுக்கு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று விவசாயிகள் பாரத் பந்த் நடத்தினர்.   அதற்குப் பல தரப்பினர் ஆதரவு அளித்துள்ளனர்.

இந்த போராட்டம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டரில், “ விவசாயிகளின் இந்த சத்தியாகிரக போராட்டம் தேசிய நலன் சார்ந்ததாகும்.   விவசாயிகளின் சத்தியாகிரக போராட்டம் மத்திய அரசின் அராஜகம் மற்றும் ஆணவத்துக்கு முடிவு கட்டும்” என இந்தியில் பதிந்துள்ளார்.