கரூர்: கரூர் மாவட்டம் மகாதானபுரம் மக்கள் போராட்டத்தால் இரயில் நிலையத்தில். ஊரின் பெயர் சமஸ்கிருதத்தில் மாற்றப்பட்ட நிலையில், பொதுமக்கள் போராட்டம் காரணமாக, சமஸ்கிருதம் அழிக்கப்பட்டு, அங்கு மீண்டும் தமிழில் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம், மகாதானபுரத்தில் சமஸ்கிருத பயிற்சி மையம் சார்பில் சமஸ்கிருதம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மத்தியஅரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக்கொள்கையின்படி, சமஸ்கிருதம் விருப்ப பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் ஏராளமானோர் விருப்ப பாடமாக படிக்க அங்கு விண்ணப்பத்து உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது, மகாதானபுரம் சமஸ்கிருத பயிற்சி பள்ளி சார்பில், இணையதளம் மூலம் சமஸ்கிருதம் பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது.
இந்த நிலையில், கரூர் மாவட்டம் மகாதானபுரம் இரயில்வே நிலையத்தில் இடம்பெற்றுள்ள பெயர் பலகையில், மகாதானபுரம் என்ற தமிழ் வார்த்தையை, சமஸ்கிருத மொழியில் மாற்றி மஹாதானபுரம் என எழுதப்பட்டது. இதைக்கண்ட தமிழ் ஆர்வலர்களும், பொதுமக்களும் கொதித்தெழுந்தனர். இதையடுத்து, மகாதானபுரம் பெயர் பலகை மீண்டும் தமிழ் எழுத்தில் மாற்றப்பட்டது. மஹாதானபுரம் “மகாதானபுரம்” ஆனது.