சென்னை: தமிழகத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளில் ஜாமர் கருவி பொருத்த வேண்டும் என்று திமுக வலியுறுத்தி உள்ளது.

தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான மனுதாக்கல் நிறைவு பெற்று இறுதிக் கட்ட வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டு விட்டது. அனைத்து மாவட்ட நிர்வாகம் சார்பில், அந்த மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு பணிகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர். ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

இந் நிலையில், தமிழகத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளில் ஜாமர் கருவி பொருத்த திமுக வலியுறுத்தியுள்ளது.  வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்யமுடியும் என்பதை சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையத்துக்கு அக்கட்சியின் கலாநிதி வீராசாமி கடிதமும் எழுதியுள்ளார். வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்யமுடியும் என்பது சர்வதேச கருத்தரங்கில் நிரூபணமாகியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.