டெல்லி: காப்பீட்டுத் துறையில் 74 சதவீதம் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்கும் மசோதா மக்களவையில் இன்று நிறைவேறியது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது பகுதி மார்ச் 8ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், இன்று கூடிய மக்களவை கூட்டத்தில், காப்பீடு துறையில் அன்னிய முதலீடு உச்சவரம்பை 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக அதிகரிக்கும் மசோதாவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனாலும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.