லண்டன்: ஆல் இங்கிலாந்து பாட்மின்டன் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில், ஜப்பான் வீராங்கனை ஒகுஹரா சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
இங்கிலாந்து நாட்டின் பர்மிங்ஹாம் நகரில், ஆல் இங்கிலாந்து பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதில், பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில், ஜப்பானின் ஒகுஹராவும், தாய்லாந்தின் சோச்சுவாங்கும் சாம்பியன் பட்டத்திற்காக மோதினர்.
இப்போட்டி, மொத்தம் 44 நிமிடங்கள் நீடித்தது. முதல் செட்டை ஒகுஹரா 21-12 என்ற கணக்கிலும், இரண்டாவது செட்டை 21-16 என்ற கணக்கிலும் கைப்பற்றி, போட்டியை வென்றார். இது, இத்தொடரில் இவரின் இரண்டாவது சாம்பியன் பட்டமாகும். இதற்குமுன் கடந்த 2016ம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தார்.