மும்பை: வாரத்தின் முதல்நாளே மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 165 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் தொடங்கியது. 49,693 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவர்த்தகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சர்வதேச பங்கு வணிகளுக்கு இடையில், இந்திய வணிக சந்தைகள், இன்று சரிவுடன் தொடங்கி உள்ளது. ஏற்கனவே கடந்த சில நாட்களாக இந்திய பங்கு வர்த்தகம் சரிவை கண்டு வரும் நிலையில், வாரத்தின் முதல்நாளே சரிவுடன் தொடங்கி உள்ளது. இதனால், இந்த வாரம் பங்கு சந்தையில் ஏற்றம் இறக்கம் இருக்கும் என எதிர்பார்ங்ககப்படுகிறது.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் கட்ட பரவலானது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுபங்கு வணிகத்தின் சரிவுக்கு காரணமாக கூறப்படுகிறது. தொடக்கத்தில் சந்தைகள் சற்று சரிவில் தான் தொடங்கியது. குறிப்பாக சென்செக்ஸ் 310.04 புள்ளிகள் குறைந்து, 49,548.20 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 70.30 புள்ளிகள் குறைந்து, 14,486.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
அதே வேளையில், இன்று ஃப்ரீ ஓபனிங் சந்தையில் வர்த்தகம் சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 108.35 புள்ளிகள் அதிகரித்து, 49,966.59 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 26.90 புள்ளிகள் அதிகரித்து, 14,770.90 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து 774 பங்குகள் ஏற்றத்திலும், 687 பங்குகள் சரிவிலும், 88 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
நிஃப்டி குறியீடு இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள், பிஎஸ்இ சென்செக்ஸ், பேங்க் நிஃப்டி தவிர, மற்ற அனைத்து குறியீடுகளும் பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றன.
குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள சிப்லா, பிபிசிஎல், சன் பார்மா, பிரிட்டானியா, யுபிஎல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே பவர் கிரிட் கார்ப், இந்தஸிந்த் வங்கி, ரிலையன்ஸ், டைட்டன் நிறுவனம், ஹெச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள சன் பார்மா, டாக்டர் ரெட்டீஸ் லேபராட்டீஸ், என்டிபிசி, அல்ட்ராடெக்சிமெண்ட், டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே பவர் கிரிட் கார்ப், ரிலையன்ஸ், இந்தஸிந்த் வங்கி, டைட்டன் நிறுவனம், ஹெச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
தற்போதைய சந்தை நிலவரப்படி, சென்செக்ஸ் 176 புள்ளிகள் குறைந்து, 449,682.24 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 32.95 புள்ளிகள் குறைந்து, 14,711.05 புள்ளிகளாகவும் காணப்படுகிறது. இந்த வாரத்தில் எக்ஸ்பெய்ரி என்பதால், வர்த்தகத்தில் ஏற்ற இறக்கம் அதிகமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.