கோவை: தமிழகத்தில் ஊழலை ஒழிக்கப்போவதாக கூறி தேர்தலில் வாக்கு கேட்கும் கமல்ஹாசனின் தேர்தல் பிரசாரத்தை பொதுமக்கள் புறக்கணித்துள்ள சோக சம்பவம் பல பகுதிகளில் நடந்தேறி வருகிறது.  பிரசாரம் செல்லும் இடங்களில் எல்லாம் அவர் மக்களால் புறக்கணிக்கப்படுவதால் கடும்  உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக ஆழ்வார்பேட்டை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை கொண்டுவரப்போகிறோம் என்று கூறி அரசியல் களத்தில் இறங்கியுள்ள  கமல்ஹாசன், மாவட்டங்களில் தேர்தல் பிரசாரத்திற்கு செல்லும்போது, தனி ஹெலிகாப்டர் மூலமே சென்று வருகிறார். இதற்காகவே கோடிக்கணக்கில் பணம் செலவிடும் கமல்ஹாசன், மக்களிடையே நன்மதிப்பை பெரும் நோக்கில், அவ்வப்போது நடை பயணம் செய்தும், ஆட்டோவில் பயணித்தும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். ஆனால், பொதுமக்கள்தான் அவரை கண்டுகொள்ளாத நிலை தொடர்ந்து வருகிறது.

நடைபெற்ற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் கமல்ஹசான்,  கோவையைச் சுற்றிய பகுதிகளில் தற்போது பிரச்சாரம் மேற்கொண்டுவருகிறார்.

நேற்று உடுமலைப்பேட்டையில் பிரச்சாரம் செய்ய முடிவு செய்து, கோவையில் இருந்து உடுமலைக்கு  ஹெலிகாப்டரில் சென்றிருக்கிறார். ஹெலிபேடில் அவர் தரையிறங்கும்போது ஒருசில கட்சியினரைத் தவிர அந்த பகுதியில்  காக்கா குருவிகள் கூட, அவரை வரவேற்க வரவில்லை. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கமல்,  பின்னர், கட்சியினர் கொண்டு வந்திருந்த பிரச்சார வாகனம்மூலம் சென்று பிரசாரத்தை மேற்கொண்டார். அவர் போகும் பல இடங்களில் பொதுமக்கள் அவரை காண ஆர்வம் காட்டாத நிலையில், கட்சியினர் சில முக்கிய பகுதிகளில் ஏற்பாடு செய்திருந்த இடங்களில் மட்டும் உரையாற்றிச் சென்றார். பல இடங்களில் அவரையும், அவரது பிரசாரத்தையும் கேட்க பொதுமக்கள் வராத நிலையில்,  பிரசார கூட்டங்களை ரத்து செய்துவிட்டு கிளம்பினார்.

அதைத்தொடர்ந்து, ஹெலிகாப்டர் மூலம் ஈரோடு, நாமக்கல் பகுதிகளுக்கு பிரசாரம் செய்ய சென்ற கமலின் ஹெலிகாப்டர் தரையிறங்க மாவட்ட நிர்வாகங்கள் அனுமதி மறுத்தால், அந்த பகுதிகளில் நடைபெற இருந்த தேர்தல் பிரசாரம் செய்து செய்யப்பட்டது.

இந்த நிலையில்,  திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளம் பகுதியில் பிரசார வாகனம்மூலம்  கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். ஆனால், அங்கும் அவரது  பிரச்சாரத்தை பொதுமக்கள் புறக்கணித்தனர்.  சாலையில் பொதுமக்கள் தென்படாததால், அதிருப்தி அடைந்த அவர், உடுமலை பகுதியில் நடைபெற இருந்த பிரச்சாரத்தையும் ரத்து செய்துவிட்டு புறப்பட்டுச் சென்றார்.

திமுக, அதிமுக தலைவர்கள், தேர்தல் பிரசாரத்துக்காக பல மணி நேரம் வாகனங்களில் பயணித்து, ஓய்வின்றி  தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வரும் சூழலில், நடிகரும், மநீம கட்சி தலைவருமான கமல்ஹாசன், சொகுசாக,ஹெலிகாப்டரின் பயணம் செய்வது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

மக்களிடையே நன்மதிப்பை பெற அவர்களோடு கலந்து பணியாற்றுவதை தவிர்க்கும் கமல்ஹாசன்,  ஹெலிகாப்டரில் வந்து பிரசாரம் மேற்கொள்வதும், பல கூட்டங்களை திடீர் திடீரென ரத்து செய்வதும்,  மநீம தொண்டர்களிடையே மட்டுமின்றி பொதுமக்களிடையேயும்  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ள  மநீம நிர்வாகி ஒருவர், கமல்ஹாசன் இன்னும் நடிகர் என்ற போர்வையிலேயே இருந்து வருகிறார். ஒவ்வொரு மாவட்டத்தையும் கடந்த சில மணி நேரம் மட்டுமே ஆகும் என்பது தெரிந்தும், வாகன பயணத்தை தவிர்த்து, ஹெலிகாப்டரின் பறக்க நினைக்கிறார் என்று கூறினார்.

ஹெலிகாப்டரில் பறந்து, ஆட்டோவில் பயணித்து, காலையிலேயே நடைபயணம் சென்றும்,  மக்களிடையே மதிப்பை பெற்று தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என சினிமா கனவு காணும்  ‘ஏழை’ கமல்ஹாசனுக்கு, தமிழக மக்கள் ஆங்காங்கே  ‘பெப்பே’ காட்டி வருவது மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளதாம்.