டில்லி

ன்று கர்நாடகா மாநிலத்தில் 1275 பேர், மற்றும் டில்லியில் 536 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் இன்று 1275 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 9,63,614 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 4 பேர் மரணம் அடைந்து இதுவரை 12,407 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 479 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 9,40,968 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

தற்போது 10,220 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் கர்நாடகா மாநிலம் மூன்றாம் இடத்தில் உள்ளது.

 

டில்லியில் இன்று 536 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 6,45,025 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 3 பேர் மரணம் அடைந்து இதுவரை 10,948 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இன்று 319 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 6,31,375 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  

தற்போது 2,702பேர் சிகிச்சையில் உள்ளனர்.   அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் டில்லி ஆறாம் இடத்தில் உள்ளது.