டெல்லி: நாட்டின் சில மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து   அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொளி காட்சி முலம் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் இன்னும் முழுமையாக கட்டுப்படுத்த முடியாத நிலைய நீடித்து வருகிறது. இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில்  இருந்து, நாடு முழுவதும் ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. பின்னர் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தறபோது 90 சதவிகிதம் அளவுக்கு இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ளது. இதற்கிடையில், அவ்வப்போது பிரதமர் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வந்தார்.

இதன் காரணமாக கட்டுக்குள் இருந்து வந்த கொரோனா தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. க பிப்ரவரிமுதல் மகாராஷ்டிரா, கேரளா, தமிழகம் உள்பட 6 மாநிலங்களில்  கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது நாள்தோறும் 15,000- க்கும்மேற்பட்டோருக்கு தொற்று ஏற்படுகிறது. பஞ்சாப், கேரளா, கர்நாடகா, குஜராத், தமிழகம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் தினசரி தொற்று அதிகமாக உள்ளது.

இதைத்தொடர்ந்து கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தும் வகையில், அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார். மேலும் தடுப்பூசிகள் செலுத்துப்படுவதை அதிகப்படுத்துவது தொடர்பாகவும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.