அகமதாபாத்: இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டி-20 போட்டியில், இந்திய அணி 20 ஓவர்களில், 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
இப்போட்டியில், கேப்டன் விராத் கோலி தவிர, வேறெந்த இந்திய பேட்ஸ்மென்களும் உருப்படியாக ஆடவில்லை. விராத் கோலி மட்டுமே 46 பந்துகளை சந்தித்து 4 சிக்ஸர்கள் & 8 பவுண்டரிகளுடன் 77 ரன்களை விளாசினார்.
ரிஷப் பன்ட் 20 பந்துகளில் 25 ரன்களை அடித்து ரன்அவுட் ஆனார். ஹர்திக் பாண்ட்யா தொடர்ந்து திணறி வருகிறார். கேஎல் ராகுலை அடுத்தப் போட்டியில் பெஞ்சில் அமர வைத்தால் அணிக்கு நல்லது எனும் வகையில் ஆடிவருகிறார்.
157 சுமாரான இலக்கை மட்டுமே நிர்ணயித்துள்ள இந்திய அணி நிர்ணயித்துள்ள நிலையில், பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு, அணியை கரை சேர்ப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.