அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில், முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணி, 28 ரன்களுக்கெல்லாம் 3 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.

துவக்க வீரர் ரோகித் ஷர்மா 17 பந்துகளில் 15 ரன்களை அடித்து அவுட்டானார். கேஎல் ராகுல் 4 பந்துகளில் டக்அவுட். இஷான் கிஷான் 9 பந்துகளில் 4 ரன்கள். ஆக, இந்த மூன்று பேட்ஸ்மென்களுமே பந்துகளை வீணடித்துள்ளனர்.

இதனால், 6.2 ஓவர்களுக்கு 28 ரன்களையே எடுத்துள்ளது இந்திய அணி.

தற்போது களத்தில் இருக்கும், விராத் கோலியும், ரிஷப் பன்ட்டும் சிறப்பான ஆடவில்லை எனில், இந்திய அணி முதல் போட்டியில் கவிழ்ந்ததைப் போலவே இன்றும் கவிழும் என்பதே விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.