அகமதாபாத்: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டி-20 போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து, முதலில் பேட்டிங் செய்யுமாறு இந்தியாவை பணித்தது.

தற்போது ஆடிவரும் இந்திய அணி 16 ரன்களுக்கு 1 விக்கெட் இழந்துள்ளது. இன்றைய அணியில் ரோகித் ஷர்மா முதன்முறையாக இடம்பெற்றுள்ளார்.

மேலும், கேஎல் ராகுல் இன்றையப் போட்டியிலும் மோசமாகவே செயல்பட்டார். மொத்தம் 4 பந்துகளை சந்தித்த அவர் டக்அவுட் ஆனார். அவர் மார்க் உட்டின் பந்தில் பெளல்டு ஆனார்.

கடந்த 2 போட்டிகளிலும், இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணியே வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வழக்கத்தை இந்திய அணி இன்று மாற்றுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.