டில்லி
வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் 2 ஆம் நாளாக இன்றும் தொடர்கிறது.
மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்கப் போவதாக அறிவித்ததில் இருந்து அந்த நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அந்த எதிர்ப்பின் அடிப்படையில் வங்கி ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அரசு இதற்குச் செவி சாய்க்கவில்லை.
இந்த போராட்டங்களின் ஒரு பகுதியாக நேற்றும் இன்றும் இரு நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடு பட்டுள்ளனர். இதனால் பல வர்த்தகர்கள் மற்றும் பொது மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். பலராலும் அவசர பணப் பரிமாற்றம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த வங்கி ஊழியர் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு அளித்து வருகின்றனர். குறிப்பாக முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநரும் பொருளாதார நிபுணருமான ரகுராம் ராமன் ஊழியர்கள் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து மத்திய அரசின் தனியார் மயமாக்கல் முடிவுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.