மேற்கு வங்க மாநில சட்டமன்ற தேர்தலில் தாரகேஸ்வர் தொகுதியில் போட்டியிட பாஜக வேட்பாராக ஸ்வபன் தாஸ் குப்தா அறிவிக்கப்பட்டுள்ளார்.

2015 ம் ஆண்டு பத்ம பூஷன் விருது பெற்ற பிரபல எழுத்தாளரான இவர் வலதுசாரி சிந்தனை உடையவர்.

மஹுவா மொய்த்ரா – ஸ்வபன் தாஸ் குப்தா

பின்னர் 2016 ம் ஆண்டு ஏப்ரல் முதல் மாநிலங்களவையில் எந்த கட்சியையும் சாராத நியமன உறுப்பினராக இருந்து வருகிறார், 2022 ல் அவரது எம்.பி. பதவி முடிகிறது.

இந்நிலையில் மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் தாரகேஸ்வர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 10 வது பிரிவின் படி நியமன உறுப்பினராக பதவியேற்ற ஆறு மாதத்திற்கு பின் எந்த ஒரு கட்சியில் சேர்ந்தாலும் அவரது பதவி பறிக்கப்படும் என்ற விதியின் அடிப்படையில் அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி. மஹுவா மொய்த்ரா, ஸ்வபன் தாஸ் குப்தாவை தகுதி நீக்கம் செய்யவேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து, ராஜ்ய சபா தலைவரும் துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு-விடம் முறையிடப்படும் என்று தெரிகிறது.

ஏற்கனவே, 2017 ம் ஆண்டு நிதிஷ் குமார் கட்சியை சேர்ந்த ராம் சந்திர பிரசாத் சிங் கோரிக்கையை ஏற்று சரத் யாதவை தகுதி நீக்கம் செய்த வெங்கையா நாயுடு, இந்த விவகாரத்திலும் இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 10 ன் கீழ் அதே போன்ற முடிவை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.