அகமதாபாத்: கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதன் காரணமாக, இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான எஞ்சிய டி-20 போட்டிகளுக்கு பார்வயைாளர்கள் யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று குஜராத் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தியா – இங்கிலாந்து இடையே 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் நடைபெற்று வருகிறது. தற்போது 2 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. 3 போட்டிகள் எஞ்சியுள்ளன.
இந்நிலையில், நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை தொடங்கியுள்ளதாக தகவல்கள் தொடர்ந்து வெளியாகும் நிலையில், பார்வையாளர்களை அனுமதிப்பது தொடர்பாக புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே பெரிய கிரிக்கெட் மைதானம் என்ற பெயரைப் பெற்றுள்ளது அகமதாபாத் கிரிக்கெட் மைதானம். இதற்கு, இந்திய பிரதமரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அதேசமயம், எஞ்சிய 3 போட்டிகளுக்கு டிக்கெட் வாங்கியவர்களுக்கு, அதற்கான கட்டணம் திரும்ப செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.