
கன்னட படமான ‘மாயாபஜார் 2016’ படம் தமிழில் ‘நாங்க ரொம்ப பிஸி’ என்ற டைட்டிலில் ரீமேக் செய்யப்பட்டு 2020-ம் ஆண்டு நவம்பர் 14-ம் தேதி தீபாவளி அன்று காலை 11 மணிக்கு நேரடியாக சன் டிவியில் ஒளிபரப்பானது.
விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் முத்தையா இயக்கியிருந்த ‘புலிக்குத்தி’ பாண்டி திரைப்படம் 2021-ம் ஆண்டு பொங்கலுக்கு சன் டிவியில் வெளியானது.
தற்போது அந்தப் பட்டியலில் ‘சர்பத்’ திரைப்படமும் இணைந்துள்ளது. பிரபாகரன் இயக்கத்தில் கதிர், சூரி, ரகசியா உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்தப் படத்தை லலித் குமார் வாயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார். இத்திரைப்படம் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஏப்ரல் 11-ம் தேதி மாலை 4 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாக அத்தொலைக்காட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
[youtube-feed feed=1]#BREAKING | இப்போது வெள்ளித்திரைக்கு முன்பாகவே உங்கள் இல்லத் திரையில்! 📺🥳
நடிகர் #Kathir மற்றும் #Soori-யின் அசத்தலான நடிப்பில் கலகலப்பான குடும்பத் திரைப்படம் 👨👩👦👦#Sarbath – ஏப்ரல் 11, ஞாயிறு மாலை 4 மணி மற்றும் இரவு 7 மணிக்கு@am_kathir | @sooriofficial | #DTR | #ColorsTamil pic.twitter.com/j6u3reN7aJ
— Colors Tamil (@ColorsTvTamil) March 14, 2021