அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி-20 போட்டியை, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா. கேப்டன் விராத் கோலி, அதிகபட்சமாக 73 ரன்கள் அடித்தார்.
இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடர், 1-1 என்ற கணக்கில் தற்போதைக்கு சமனாகியுள்ளது.
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து, 20 ஓவர்களில், 6 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் அடித்தது.
பின்னர் களமிறங்கிய இந்திய அணியில், ராகுல் டக்அவுட்டாக, இஷான் கிஷான் 56 ரன்கள் அடித்து அவுட்டானார். பின்னர், விராத் கோலி நிலைத்து நின்று, 49 பந்துகளில் 3 சிக்ஸர்கள் & 5 பவுண்டரிகளுடன் 73 ரன்களை அடித்து, இறுதிவரை நாட்அவுட்டாக இருந்தார்
ரிஷப் பன்ட் 26 ரன்கள் அடித்து அவுட்டானார். இதன்மூலம், இந்திய அணி, 17.5 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, முதல் போட்டி தோல்விக்கு பதிலடி கொடுத்தது.