இன்று காரடையான் நோன்பு – 14/03/2021
பெண்கள் தங்கள் மாங்கல்யம் நிலைக்கவும் கணவனை விட்டுப் பிரியாமல் இருக்கவும் நோன்பு நோற்கும் தினம் காரடையான் நோன்பு ஆகும்.

புராண காலத்தில் சாவித்திரி தனது கணவனின் அந்திம காலம் நெருங்குவதை அறிந்து இந்த நோன்பு இருந்தாள். இந்த நோன்பின் பலனாக அவளுடைய கண்ணுக்கு எமன் தெரிந்தான். தனது கணவன் சத்தியவான் உயிரை எடுத்துச் செல்ல வேண்டாம் என அவள் கேட்டுக் கொண்டாள். அவன் தனது கடமையில் இருந்து தவற மாட்டேன் எனக் கூறி உயிரை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
நோன்பின் மகிமை காரணமாக அவளால் எமனைப் பின் தொடர முடிந்தது. தன்னை பின் தொடர்வதைக் கண்ட சாவித்திரியிடம் தனது பணியில் குறுக்கிட வேண்டாம் எனவும் அவளுக்கு அவள் கணவன் உயிரைத் தவிர வேறு வரம் தருவதாக எமன் வாக்களித்தான். தனக்கு நல் மக்கட்பேறு தேவை எனச் சாவித்திரி வரம் கேட்க அப்படியே ஆகட்டும் என எமன் வரம் கொடுத்தான்
சாவித்திரி தான் ஒரு பத்தினிப் பெண் என்பதால் எமனது வாக்கு நிறைவேறத் தனது கணவன் உயிரைத் திரும்ப அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டாள் தனது வரத்தால் தானே மாட்டிக்கொண்டதை அறிந்து சத்தியவான் உயிரை திரும்ப அளித்தான். எனவே இந்த நோன்பு மிகவும் சிறப்பானதாகும்.
இந்த வருடம் இந்த நோன்பு இன்று 14/03/2021 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த மந்திரங்களைக் கூறி மஞ்சள் நூலினால் செய்த சரட்டை அணிந்து கொண்டு காமாட்சி தேவிக்கு வெல்லம் மற்றும் உப்பு அடையை நைவேத்யம் செய்வது வழக்கமாகும்.
சங்கல்ப மந்திரம்
மம தீர்க்க சௌமாஙல்ய அவாப்யர்தம்
மம பரதுச்ச்ச அன்யோன்ய ப்ரீதி
அபிவிருதியர்தம் அனியோகர்த்தம்
ஸ்ரீ காமாட்சி பூஜாம் கரிஷ்யே
தியானம்
ஏகாம்பர நாத தயிதாம் காமாட்சீம்
புவனேஸ்வரீம் தியாயயாமி ஹ்ருதயே
தேவீம் வாஞ்சத்தார்த்த ப்ரதாயிநீம்
காமட்சிம் ஆவகயாமி
நேவேத்தியம்
உருகாத வெண்ணெயும் ஓர் அடையும் நோற்று
உனக்கு நான் வைத்தேன்
எந்நாளும் என் கணவர் எனை விட்டுப் பிரியாதிருக்க
வரன் அருள வேண்டும் சிவசக்தியே விருத்தம்பிகையே
நோன்பு சரடு மந்திரம்
தோரம் கிருகணாமி சுபகே சகாரித்ரம் தராம்யாகம்
பர்துகூ ஆயுஷ சித்யர்த்தம் சுப்ரீதா பவ சர்வதா
[youtube-feed feed=1]